மகிந்தவின் நிலை தொடர்பில் கோத்தபாயவின் முக்கிய அறிவிப்பு

Report Print Kamel Kamel in அரசியல்

புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு நாடாளுமன்றில் போதியளவு பெரும்பான்மை பலம் உண்டு என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று மாலை எம்பிலிபிட்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமையயே அலரி மாளிகைக்கு சென்று முன்னாள் பிரதமரை சந்தித்தேன்.

அலரி மாளிகை தொடர்பிலான சர்ச்சை குறித்தும், பிரதமரின் பாதுகாப்பு குறித்தும் ரணில் விக்ரமசிங்கவுடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்தியதாக கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.