ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீது கருணை காட்டிய மைத்திரி விக்ரமசிங்க?

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் மீது முன்னாள் பிரதமரின் துணையார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க காட்டிய காருண்யம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அலரி மாளிகையில் நேற்றைய தினம் கட்சி ஆதரவாளர்களுக்கு உணவுப் பொதி (சோறு பார்சல்) வழங்கப்பட்டுள்ளது.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட இரவு உணவு ஆயத்தம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், இந்த விடயத்தில் தலையீடு செய்த மைத்திரி, கட்சி ஆதரவாளர்கள் எதனை உண்கிறார்களோ அதனையே அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உட்கொள்ள வேண்டுமென கோரியுள்ளார்.

இதன்படி, அலரி மாளிகையில் குழுமியிருந்த 5000 கட்சி ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவுப் பொதியை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உட்கொண்டதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட இராப்போசனமொன்றை வழங்கத் திட்டமிட்டிருந்தார்.

கட்சித் தலைவரை பாதுகாக்கும் சாதாரண தொண்டர்களை விடவும் சிறந்த உணவு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படக் கூடாது என பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுவாக அரசியல் மேடைகளில் காணக்கிடைக்காத மைத்திரி விக்ரமசிங்க அண்மையில் கொள்ளுப்பிட்டியில் நடைபெற்ற எதிர்ப்பு போராட்ட மேடையில் ஏறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers