நாடாளுமன்றம் 7 ஆம் திகதி இல்லை 16 ஆம் திகதியே கூட்டப்படும்! மகிந்த

Report Print Nivetha in அரசியல்

முன்னாள் பிரதமர் ரணில் புதிய பிரதமர் பதவி அரசியல் அமைப்புக்கு முரணானது என்று கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாடாளுமன்றம் எதிர்வரும் 7ஆம் திகதி கூட்டப்படாது, 16ஆம் திகதியே கூட்டப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமர் நியமனம் அரசியல் அமைப்புக்கு முரணானது எனின் ஏன் ஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்தை நாடவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 7 ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என ஜனாதிபதி தனக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers