யாரும் நினைத்து பார்க்க முடியாத திருப்பம்! மகிந்த - மைத்திரியுடன் இணையும் முக்கியஸ்தர்கள்

Report Print Murali Murali in அரசியல்

இதுவரை எவரும் நினைக்காத சிலர், எதிர்வரும் நாட்களில், அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவுள்ளனர் என போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்தார்.

இவ்வாறு அரசாங்கத்தில் இணைந்துகொள்ள உள்ளவர்கள் தொடர்பில், இன்றோ அல்லது நாளையோ தெரிந்துகொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கொழும்பு, டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை எவராலும் எதிர்க்க முடியாது. இன்றைய தினத்திலும் அமைச்சர்கள் சிலர் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்கள்.

எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் அரசாங்கத்தினால் வரவு செலவு திட்டத்திற்கு மாற்றாக இடைக்கால வரவு செலவு திட்டமொன்று பிரதமரால் முன்வைக்கப்படும்.

இந்நிலையில், இதுவரை எவரும் நினைக்காத சிலர், எதிர்வரும் நாட்களில், அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவுள்ளனர்.

இவ்வாறு அரசாங்கத்தில் இணைந்துகொள்ள உள்ளவர்கள் தொடர்பில், இன்றோ அல்லது நாளையோ தெரிந்துகொள்ள முடியும் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.