ராஜிதவின் அமைச்சு பதவி குறித்து மைத்திரிக்கு அவசர கடிதம்

Report Print Nivetha in அரசியல்

பொதுமக்களின் அவமதிப்புக்குள்ளாகியுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை எந்த வகையிலும் அமைச்சரவைக்குள் இணைத்துக் கொள்ள வேண்டாம் என தேசிய பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த கடிதம் தேசிய பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியத்தின் செயலாளர் சன்ன ஜயசுமனவின் கையெழுத்துடன் இன்று ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மீண்டும் அவருக்கு சுகாதார அமைச்சுப் பதவியை வழங்க வேண்டாம் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, சுகாதார அமைச்சுப் பதவி மாத்திரமல்லாது வேறு அமைச்சுப் பொறுப்புக்களையும் அவருக்கு வழங்க வேண்டாம் என்றும் தேசிய பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

Latest Offers