சபை முதல்வர் பதவிக்கு தினேஷ் குணவர்தன

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்றத்தின் சபை முதல்வர் பதவிக்கு தினேஷ் குணவர்தனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் இணை ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பிரதமரின் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். நாடாளுமன்ற கூடிய பின்னர் புதிய சபை முதல்வராக தினேஷ் குணவர்தன பதவி வகிப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை சட்ட ரீதியான அரசாங்கம் தமது தரப்பே எனக் கூறி வரும் ஐக்கிய தேசியக்கட்சியினர் தமது அரசாங்கத்தின் சபை முதல்வராக லக்ஷ்மன் கிரியெல்ல பதவி வகிப்பார் தெரிவித்துள்ளனர்.