மைத்திரியுடன் பேசியது என்ன? மனோ கணேசன் வெளியிட்ட அதிரடி தகவல்

Report Print Shalini in அரசியல்

மைத்திரி - மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இணைவதற்கு முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில் இன்று காலை திடீர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

தற்போதைய சூழ்நிலையில் கட்சித்தாவல்கள் அதிகமாக இடம்பெறும் சந்தர்ப்பத்தில் மனோ - மைத்திரி சந்திப்பு சற்று பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் குறித்த சந்திப்பு குறித்து முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நாகரீகமான ஒரு அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு எம்பிக்களும் ஒரு குழுவாக எனது தலைமையிலேயே, ஜனாதிபதி மைத்திரியை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலே சந்தித்து அவரது அரசாங்கத்தில் இணைய முடியாது என்று நேரடியாக கூறி விட்டோம்” என மனோ கணேசன் பதிவிட்டுள்ளார்.

Latest Offers