மைத்திரிக்கு ஏற்பட்ட அவமானம்: விருதை திருப்பி அனுப்பிய நேசையா

Report Print Shalini in அரசியல்

ஓய்வு பெற்ற அரச ஊழியரான தேவநேசன் நேசையாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்ட அதி உயர் விருதை அவர் திருப்பி அனுப்பியுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜனாதிபதியால் தேவநேசன் நேசையாவுக்கு "தேசமானிய" விருது வழங்கி வைக்கப்பட்டு இருந்தது.

எனினும் குறித்த விருதையும் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பதக்கத்தையும் தேவநேசன் நேசையா திருப்பி அனுப்பியுள்ளதுடன், கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

சட்டம், அரசியல் யாப்பு என்பவற்றை மீறி செயற்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த விருதை அவர் திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.

தேவநேசன் நேசையா 1959ஆம் ஆண்டு முதல் அரச சேவையில் ஈடுபட்டமைக்காக இவ்விருது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers