மனோ கணேசனிடம் மைத்திரி கேட்ட மூன்று வரங்கள்! இறுதியில் கிடைத்த சோகமான பதில்

Report Print Murali Murali in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எமது செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

இந்தச் சந்திப்பின் தம்மிடம் மூன்று முக்கிய கோரிக்கைகள் ஜனாதிபதி முன்வைத்திருந்தார்.

“முதலாவதாக, புதிய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரினார்.

இரண்டாவதாக, மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் போது அதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கோரினார்.

மூன்றாவதாக, ஒருவேளை வாக்கெடுப்பில் ஐக்கிய தேசிய முன்னணி வெற்றிபெற்றால், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டாம், அவருடன் இணைந்து செயற்பட முடியாது என்று கோரினார்.

எனினும், இந்த மூன்று கோரிக்கைகளையும் நிராகரித்து விட்டோம். மகிந்த தலைமையிலான அரசாங்கத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்று திட்டவட்டமாகத் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளோம்.

பிரதமர் யார் என்பதை நாங்களே தீர்மானிப்போம், அதனை வெளியிலிருக்கும் வேறெவரும் தீர்மானிக்க அனுமதியோம் என்றும் ஜனாதிபதியிடம் கூறியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers