ரணிலிடம் தெரிவித்து விட்டே மைத்திரியிடம் சென்றேன்!

Report Print Kamel Kamel in அரசியல்

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் அறிவித்து விட்டே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தாம் சந்திக்கச் சென்றதாக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்...

பிரதமர் ரணிலிடம் அறிவித்துவிட்டே நான் ஜனாதிபதி மைத்திரியை சந்திக்கச் சென்றேன்.

ரணிலுக்கு அறிவிக்காது நான் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்ததாக வெளிக்காட்டும் செய்திகள் சில ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த செய்திகள் அனைத்தும் அடிப்படையற்ற பொய்களாகும்.

இந்த சந்திப்பிற்கு முன்னதாகவும் சந்திப்பின் பின்னரும் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனைத்து விடயங்களும் அறிவிக்கப்பட்டது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.