த.தே.கூட்டமைப்பின் முடிவு குறித்து கருணா வெளியிட்டுள்ள தகவல்

Report Print Shalini in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்? என தமிழ் மக்கள் கேள்வி கேட்கின்றதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா குறிப்பிட்டுள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இந்த கேள்வியை பதிவிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக உறுதியளித்துள்ளார், அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணிகளை விடுவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

அப்படி இருந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் என்று தமிழ் மக்கள் கேள்வி கேட்கின்றனர்” என கருணா பதிவிட்டுள்ளார்.