மஹிந்தவுக்கு ஆதரவளித்தால் எமக்கு பாதிப்பு! விமான நிலையத்தில் வைத்து வெளிவந்த விடயம்

Report Print Shalini in அரசியல்

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது என்பது எமக்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

புனித மக்காவை நோக்கி புறப்பட்டுச் செல்ல முன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

“புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவொரு சட்டவிரோதமான செயற்பாடு என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் தொடர்ந்தும் இருந்து வருகிறோம்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் கீழ்த்தரமான செயற்பாடுகளிலிருந்து விலகிக் கொண்டு, ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் விடயத்தில் சட்டபூர்வமாக கட்சித் தலைவர்களுடன் இணக்கப்பாட்டுக்கு வந்து தீர்மானம் எடுப்பதாயின் எந்தப் பிரச்சினையும் இல்லை.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் முன்னைய சந்தர்ப்பங்களில் இருந்துள்ள காரணத்தினால், மீண்டும் ஒத்துழைக்க வேண்டும் என கூறுவது நியாயமாகாது. அது எமது கட்சிக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதனை எங்களால் செய்ய முடியாது.

மேலும், எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கட்சித் தலைவரின் அனுமதியின்றி, வேறு எவருடனும் கூட்டு சேர்வதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்” என்று ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

Latest Offers