ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட தயார் - ரணில்

Report Print Ajith Ajith in அரசியல்

ஜனாதிபதி தமக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்குவாராக இருந்தால், அவருடன் இணைந்து செயற்பட எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து இது குறித்து குறிப்பிடுகையில், ரணில் விக்கிரமசிங்கவே இலங்கையின் பிரதமர் என கோடிட்டு காட்டியுள்ளது.

கடந்த மாதம் 26ஆம் திகதியன்று ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி நீக்கப்பட்டார். அதேவேளை நாடாளுமன்றமும் நவம்பர் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தாம் ஜனாதிபதியுடன் எவ்வித தனிப்பட்ட முரண்பாட்டையும் கொண்டிருக்கவில்லை என்று ரணில் விக்கிரமசிங்க தி ஹிந்துவிடம் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க தி ஹிந்துவிடம் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “இலங்கையின் அரசியலமைப்பில் தனிப்பட்ட விடயங்களுக்கு இடமில்லை.

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு தாமதம் ஏற்படுத்தப்படுவது, மகிந்த தரப்பில் இன்னும் பெரும்பான்மை பலம் இல்லாமையே காரணம் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நாடாளுமன்றம் கூட்டப்படாமையால் நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றும் ரணில் விக்கிரமசிங்க இதன் போது தெரிவித்திருந்தார்.

தம்மை பொறுத்தவரை அனுமானங்களை காட்டிலும் உண்மை நிலையை பற்றி பேசுவதே பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ச தரப்புக்கு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று தி ஹிந்துவிடம் தெளிவுப்பட குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers