விஷேட நீதிமன்றம் தொடர்பில் முடிவெடுக்கப்படும் - சுசில் பிரேமஜயந்த

Report Print Steephen Steephen in அரசியல்

நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்திய மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என உள்விவகாரம், அரச நிர்வாகம் மற்றும் நீதியமைச்சரான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தனது அமைச்சில் கடமைகளை பொறுபேற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன் அடுத்த சில தினங்களில் முழுமையான அமைச்சரவை நியமிக்கப்பட்டு விடும் எனவும் இதனடிப்படையில் அரசாங்கம் ஒரு வருடத்திற்கு மேலாக நாட்டை ஆட்சி செய்யும் எனவும் பிரேமஜயந்த இதன் போது தெரிவித்திருந்தார்.