மகிந்தவை தோற்கடித்த எமக்கு மைத்திரி சவால் அல்ல! சரத் பொன்சேகா

Report Print Steephen Steephen in அரசியல்

மிகவும் குறுகிய காலம் பதவியை வகித்த பிரதமர் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச வரலாற்றில் எழுதப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்திற்கான அமைப்பு இன்று மதியம் ஒழுங்கு செய்திருந்த ஐக்கிய தேசிய முன்னணியின் எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மனசாட்சிக்கு இணங்க ஜனாதிபதிக்கும் தற்போதைய பிரதமருக்கும் மகிழ்ச்சியடைய முடியாது. இதன் காரணமாக மன ரீதியாக கவலையடைய வேண்டாம் ஐக்கிய தேசியக்கட்சியினரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை தோற்கடித்த எமக்கு இந்த மைத்திரி பெரிய சவால் அல்ல எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

இந்த எதிர்ப்பு பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்துக்கொண்டுள்ளனர். இதன் காரணமாக கொழும்பில் உள்ள பல பிரதான வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட சரத் பொன்சேகா, முன்னாள் பிரதமரின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரிகளின் எண்ணிக்கை 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஒருவருக்கு இந்த கதி என்றால் மக்களின் நிலை என்னவாகும்?

நாட்டில் வாழும் புத்திஜீவிகள் என்ற வகையில், மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி ஆகியோர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை உன்னிபாக அவதானிக்க வேண்டும். தற்போது எமது அரசாங்கம் பொலிஸாருக்கு வழங்கியிருந்த சுதந்திரம் முற்றாக பறிக்கப்பட்டுள்ளது.

இதனால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை கட்டுவதன் ஊடாக ஐக்கிய தேசியக்கட்சிக்கு இருக்கும் அதிகாரத்தை வெளிக்காட்ட முடியும்.

நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் அதிகாரத்தை காண்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers