சபாநாயகருக்கு புத்தி சுவாதீனமில்லை: டிலான் பெரேரா

Report Print Steephen Steephen in அரசியல்

சபாநாயகர் கரு ஜயசூரிய தனது அரசியல் எதிர்காலத்திட்டத்திற்காக நாடாளுமன்றத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்காக சபாநாயகர், ஐக்கிய தேசியக்கட்சிக்குள் சஜித் பிரேமதாசவுடன் கடுமையாக போட்டியிட்டு வருவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க தரப்பினர் தாம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க கூடிய கரு ஜயசூரியவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் என்ற கரட் கிழங்கை காட்டி வருகின்றனர்.

இறுதியில் கரு ஜயசூரியவோ, சஜித் பிரேமதாசவோ நிறுத்தப்பட போவதில்லை. ரணில் விக்ரமசிங்கவே போட்டியிடுவார்.

இந்த நிலையில், கரு ஜயசூரிய தனது அரசியல் நோக்கத்திற்காக தற்போது நாடாளுமன்றத்தை பயன்படுத்தி வருகிறார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய முதலில் வெளியிட்ட அறிக்கைக்கும் இரண்டாவதாக வெளியிட்ட அறிக்கைக்கும் இடையில் முரண்பாடுகள் இருக்கின்றன.

முதல் அறிக்கையில், தான் ஜனாதிபதியை சந்தித்தேன் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை ஏற்றுக்கொள்கிறேன். புதிய பிரதமரை ஏற்றுக்கொள்கிறேன்.

புதிய பிரதமருக்கு நாடாளுமன்றத்தில் ஆசனத்தை ஒதுக்குவதாகவும் கூறினார். புதிய சபை முதல்வரை நியமிக்க இணங்குகிறேன் என முதல் அறிக்கையில் கூறியிருந்தார்.

இரண்டாவது அறிக்கையில் முதல் கூறியதை முற்றாக தலைகீழாக மாற்றியுள்ளார். இது சரியாக மனுஷ நாணயக்கார, புதிய பிரதமரை ஏற்று அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து, 5டி நாட்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது போலான விடயம்.

முதல் அறிக்கையை வெளியிட்டு சில நாட்கள் சென்ற பின்னர் புதிய அறிக்கை எந்த அடிப்படையில் வெளியிடப்பட்டது. புதிய அறிவு வந்து விட்டதா அல்லது வேறு சுமை வந்து விட்டதா.

சபாநாயகர் தரப்பில் அரசியல் விளையாட்டு முன்னெடுக்கப்படுவதை எம்மால் காணமுடிகிறது. சபாநாயகர் புத்தி தெளிவில்லாமல் இருக்கின்றார்.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட சில தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை சபாநாயகருக்கு கூறுகிறேன். சபாநாயகராக பதவிக்கு வரவும் தகுதிகள் இருக்கின்றன. சபாநாயகராக வருவதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்.

அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாக வேண்டியவருக்கு இருக்கக் கூடாத தகுதிகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஒருவருக்கு நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது.

18 வயது பூர்த்தியாகாதவர் நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது. புத்தி சுவாதீனமற்றவர் நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது.

சபாநாயகர் புத்தி சுவாதீனத்துடன் இருக்கின்றார என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவர் புத்தி சுவாதீனமற்றவராக செயற்படுகிறது.

இதனால், நாடாளுன்ற உறுப்பினராக பதவி வகிக்கவும் சபாநாயகர் தகுதியற்றவர். ஜனாதிபதியாக தெரிவு செய்யவும் தகுதியற்றவர் என டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers