சரத் என் சில்வா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரக் கூடாது!

Report Print Kamel Kamel in அரசியல்

மீண்டும் மீண்டும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்...

நீதிச் சேவையை அரசியல் மயப்படுத்திய, மாதத்திற்கு மாதம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா எமது நண்பர்.

எனினும், அவர் பதவி வகித்த காலத்தின் பின்னர் அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் திருத்தங்களை அவர் படித்துப் பார்க்க வேண்டும்.

தயவு செய்து 19ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக படித்துப் பார்க்குமாறு நாம் வினயமாக வேண்டிக்கொள்கின்றோம்.

என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் நாடாளுமன்றம் கலைப்பது பற்றி நான் பிழையான ஆலோசனை வழங்கினேன் என மீண்டும் நாட்டு மக்களிடம் வெட்கி நிற்க வேண்டிய நிலைமை சரத் என் சில்வாவிற்கு ஏற்படும்.

எனவே அவ்வாறான ஓர் நிலையை தவிர்த்துக்கொள்ள 19ம் திருத்தச் சட்டத்தை படித்துப் பார்க்குமாறு கோருகின்றோம் என அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் சுனாமி நிவாரண நிதியில் தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச ஊழல் மோசடி செய்ததாகவும் அந்த வழக்கில் பிழையான தீர்ப்பினை வழங்கி அவரை விடுதலை செய்தமைக்காக எனனை அனைவரும் மன்னிக்க வேண்டுமென சரத் என் சில்வா நாட்டு மக்களிடம் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers