மைத்திரிக்கும் மகிந்தவுக்கும் சிறந்த பாடத்தை கற்றுக்கொடுப்போம்: ஐ.தே. க

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மற்றும் மகிந்த ராஜபக்ச தரப்பினர் தமக்கு 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக கூறுகின்றனர் எனவும் அப்படியானால் அதனை நிரூபிக்க உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற எதிர்ப்பு பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தை அடிக்கடி ஒத்திவைத்து வருகின்றனர். 5 ஆம் திகதி என்றனர்.7 ஆம் திகதி என்றனர். 14ஆம் திகதி என்கின்றனர் 16 ஆம் திகதி என்கின்றனர். அதேவளை நேற்று நாடாளுமன்றத்தை கலைக்க முடியுமா என சட்டமா அதிபரிடம் சட;ட ஆலோசனை கேட்டுள்ளனர்.

அவர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய கலைக்க முடியதது என்று கூறியிருக்கின்றார். இவற்றின் மூலம் ராஜபக்சவினருக்கும் மைத்திரிக்கும் பெரும்பான்மை இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தினால், கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சித்து வருகின்றனர்.

சகோதரர் ஒருவர் ஊடாக எமது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு பெருந்தொகை பணம் எடுத்துச் சென்று கொடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பணம் கொண்டு சென்றவரை திருப்பி அனுப்பியுள்ளார்.

ராஜபக்சவினர் இப்படித்தான் இந்த நாட்டில் பெரும்பான்மை பலத்தை பெற முயற்சித்து வருகின்றனர்.

இதனால், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் அதனை பாதுகாக்கவும் கட்சி பேதமின்றி அனைவரும் இணையுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

இதற்கு ஐக்கிய தேசிய முன்னணியும் சிவில் அமைப்புகளும், ஜனநாயகத்தை விரும்பும் அனைவரும் இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்குவார்கள்.

இந்த தவறை அனுமதித்தால், எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் அனைவருக்கும் இது பிழையான முன்னுதாரணமாக இருக்கும். அப்படி நடந்தால், ஜனநாயகம் அழிந்து நாடு மிகவும் பயங்கரமான சர்வாதிகாரத்தை நோக்கி தள்ளப்படும்.

எடுத்துள்ள இந்த தீர்மானத்திற்கு எதிராக மக்கள் சக்தியை திரட்டி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மகிந்த ராஜபக்சவும் நாங்கள் சிறந்த பாடத்தை கற்பிப்போம் என அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த எதிர்ப்பு பேரணியில் கருந்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண, மைத்திரி மற்றும் மகிந்த தரப்பினர் அனைத்து முயற்சிகளை செய்து பார்த்து முடியாத நிலையில், மண் எண்ணெய் உடலில் பட்ட சாரை பாம்பு போல் ஏதேதோ முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் இந்த சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராக பெருமளவிலான மக்கள் நாளுக்கு நாள் திரண்டு வருகின்றனர். பெரும்பான்மையான மக்கள் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறே கோருகின்றனர்.

நாடாளுமன்றம் உடனடியாக கூட்டப்பட்டால், இரண்டு மணிநேரத்திற்குள் இந்த பிரச்சினை முடிவுக்கு கொண்டு வர முடியும்.

இந்த அதிகார பதவி ஆசை பிடித்தவர்கள், நாட்டையும் மக்களையும் அதளபாதாளத்திற்குள் தள்ளியுள்ளனர். ஜனநாயக விரோத நடவடிக்கைகக்கு எதிராக எதிர்வரும் 12 ஆம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தவுள்ளோம்.

எந்த இடத்தில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமாகும் என்பதை நாங்கள் அன்றைய தினம் கூறுவோம். அனைத்து மக்களும் கட்சி பேதமின்றி இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை ஏற்படுத்துமாறு ஜனாதிபதிக்கும் மகிந்த ராஜபக்சவும் அழுத்தங்களை கொடுப்போம் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த பேரணியில் கருத்து வெளியிட்ட பாலித தெவரப்பெரும, மைத்திரிபால சிறிசேனவின் தாயாரிடம் கேட்டால் தெரியும் தாயாரின் மூக்கு எந்தளவுக்கு காயமாகி உள்ளது என்பதை அறிந்துக்கொள்ள முடியும்.

நாட்டின் 62 லட்சம் மக்களும் 57 லட்சம் மக்களும், மைத்திரிபாலவின் தாயாரை நினைவுப்படுத்தி திட்டியுள்ளனர். நல்லாட்சிக்காக அதிகாரத்திற்கு வந்த மைத்திரிபால சிறிசேன நாட்டின் சட்டத்தை குழி தோண்டி புதைத்துள்ளார். பலந்தமாக நுழைந்து அரச ஊடகங்களை கைப்பற்றினர்.

அரச நிறுவனங்களை பலந்தமாக கைப்பற்றினர். முற்றாக நல்லாட்சி அழிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சட்டம் இல்லை. கட்டாயம் நாம் சட்டத்தை மீற வேண்டும்.

சிறைகளை நிரப்ப வேண்டும். பொலிஸ் நிலையங்களை நிரப்ப வேண்டும். செய்துள்ள இந்த சட்டவிரோத செயலுக்காக மக்கள் வீதியில் இறங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Latest Offers