மைத்திரிக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்!

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டு வந்து ஸ்திரமான அரசாங்கத்தை அமைக்க ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்னர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத அரசியலை மக்கள் தொடர்ந்தும் ஆதரிக்கின்றனரா? இல்லையா? என்று நாட்டு மக்களின் நிலைப்பாட்டை அறியவும் அரசாங்கத்தின் இருப்பை தீர்மானிக்க வேண்டும் என்பதால், ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்குமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுப்பதாகவும் சம்பிக்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முற்றாக அரசியலமைப்புச் சட்டத்தை மீறி செயற்பட்டு வருகிறார். நாடாளுமன்றத்துடன் கலந்துரையாடாமல் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க முடியாது.

அத்துடன் நாடாளுமன்றத்தையும் கலைக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு கிடையாது. நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் யோசனை ஒன்றை நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அதன் பின்னரே ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும். தம்மை சட்ட அறிஞர்களாக கருதும் சிலர், அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் ஒரு வார்த்தையை சுட்டிக்காட்டி ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என்று கூறுகின்றனர்.

ஆனால், 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் அந்த அதிகாரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers