ஜனாதிபதி வாக்குறுதிகளை கேவலமான முறையில் காட்டிக்கொடுத்துள்ளார்!

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக போட்டியிட்ட போது வழங்கிய வாக்குறுதிகளை கேவலமான முறையில் காட்டிக்கொடுத்துள்ளதாக நீதியான சமூகத்தின் மக்கள் அமைப்பின் தலைவர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இன்று நடைபெற்ற மாதுளுவாவே சோபித தேரரின் மூன்றாம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுத பல முறை முயற்சித்தேன். கௌரவ ஜனாதிபதி அவர்களே என்று எழுத முடியாது போனது. எனது உடலில் உள்ள பஞ்சபூதங்களும் நடுங்க ஆரம்பித்தன.

இப்படியான ஒருவரை எப்படி கௌரவ ஜனாதிபதி விளிப்பது. இந்த நினைவு தின நிகழ்வு இலங்கை மன்ற கல்லூரியில் நடத்தப்படவிருந்தது. ஏதோ ஒரு காரணத்தினால் புதிய நகர மண்டத்தில் நடத்த நேரிட்டுள்ளது.

விதிப்படி நடந்துள்ளது. இந்த இடத்திலேயே மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக முதலில் அமர்ந்தார். அன்று அவர் கூறியவை காதுகளில் எதிரொலிக்கின்றன.

ஆறு மாதங்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை ஒழிப்பதாக கூறினார். ஜனநாயகத்தை பாதுகாத்து, சட்டத்தின் ஆதிபத்தியத்தை காப்பதாக கூறினார்.

எனினும் கேவலமான முறையில் அவர் தனது வாக்குறுதிதிகளை காட்டிக்கொடுத்துள்ளார். இதனை நாங்கள் சில காலங்களுக்கு முன்னரே அறிந்திருந்தோம். சோபித தேரரும் அறிந்திருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியை பெற்றுக்கொண்டமையானது ஜனவரி 8 இன் எதிர்பார்ப்புகள் கொண்ட தண்ணீர் குடத்தை தரையில் அடித்து உடைத்தது போன்ற விடயம்.

ரணில் விக்ரமசிங்கவுடன் அரசாங்கத்தை கொண்டு நடத்த முடியாது என்று மைத்திரிபால சிறிசேன கூறியது பச்சை பொய். குற்றவாளிகளை ஜனாதிபதியே கைது செய்ய இடமளிக்கவில்லை.

சிங்கள கிராமத்தவர்களிடம் இருக்கும் ஒழுக்கம் இந்த நபரிடம் இல்லை. ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்குமாறு நான் எவரிடமாவது கோரியிருந்தால், அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.

இந்த நாட்டில் நாம் எவ்வளவு காலம் வாழ முடியுமோ தெரியாது. சோபித தேரரின் மூன்றாவது நினைவு தினத்தில் கலந்துக்கொள்ள நாம் ஜனாதிபதி அழைப்பு விடுத்தோம்.

எனினும் அவரால் அதில் கலந்துக்கொள்ள முடியாது.

அதேபோல் ஜனாதிபதி விஜேராம மாவத்தையில் உள்ள தனது வீட்டில் விளக்குகளை அனைத்து விட்டு, பாதுகாப்பு அதிகாரிகளை வெளியேற்றி விட்டு கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் எனவும் பேராசிரியர் சரத் விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers