ரணிலை தவிர்த்து ஐதேக உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்த மகிந்த தரப்பு

Report Print Kamel Kamel in அரசியல்

கடமை என்ற அடிப்படையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தவிர அரசாங்கத்தில் இணையுமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்ததாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் பணம் வழங்குவதாக வாக்குறுதியளிக்கவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கீழ் வலுவான அரசாங்கத்தை உருவாக்கி, வலுவான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படும் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers