மகிந்த - மைத்திரிக்கு எதிராக வாக்களிக்க இதுவே காரணம்! சுமந்திரன் விளக்கம்

Report Print Murali Murali in அரசியல்

2015 ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஏற்படுத்திய மாற்றம் தற்போது தலைகீழாக மாற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எந்த அரசாங்கத்தை வேண்டாம் என்று நினைத்தோமோ அந்த அரசாங்கத்தை மீளவும் கொண்டு வருவதற்கான அதுவும், பின் கதவு வழியாக கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்க கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தடுப்பதற்கான அதிகாரம் நாடாளுமன்றிடம் மட்டுமே இருக்கின்றது. ஆகையினால் தான் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி மகிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இருக்கின்றதா என சோதித்துப் பார்க்க வேண்டும்.

நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லாது போனால் மகிந்த ராஜபக்ச பிரதமராக இருக்க முடியாது. எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

எனினும் அதனை தடுப்பதற்கான சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளன. இந்நிலையில், நாடாளுமன்றத்தை கலைக்கவும் முடியாது.

அதற்கான அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு கடையாது. நான்கரை ஆண்டுகளுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது.

அதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டுமாக இருந்தால் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம்.

ஜனாதிபதி பிரதமரை நீக்கியதும், இன்னொருவரை நியமித்ததும் முற்றிலும் சட்டத்திற்கு விரோமானது. 19 திருத்த சட்டத்தில் முன்னர் இருந்த அதிகாரம் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு எதிராக வாக்களிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers