மைத்திரியை விமர்சிக்கும் வாசுதேவ! சகிக்க முடியவில்லை என கவலை

Report Print Steephen Steephen in அரசியல்

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் இலங்கையின் உள்விவகாரங்களுக்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலைமையில், சபாநாயகர் கரு ஜயசூரிய, ராஜதந்திரிகளை நாடாளுமன்றத்திற்கு அழைத்து சந்தித்திருப்பதை வாசுதேவ விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில் சபாநாயகர் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய தூதுவர்கள் உட்பட வெளிநாட்டு ராஜதந்திரிகளை தனது நாடாளுமன்ற அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியமை குறித்து அதிர்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உலகின் ஏனைய நாடுகளின் தேர்தல் விடயங்கள் மற்றும் அரசியல் துறையில் தலையிடுவது கவலைக்குரியது.

இவ்வாறான நிலையில் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய தூதுவர்கள் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடுகளை மேற்கொள்ளவதை சகித்துக்கொள்ள முடியாது.

இந்த மேற்குல நாடுகளில் கடந்த 2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை அகற்றுவதில் முக்கிய பங்காற்றியமை இரகசியமான ஒன்றல்ல எனவும் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.

Latest Offers