எதற்கும் தயார்! ரணில் தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மைத்திரி

Report Print Murali Murali in அரசியல்

நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்டுவோம். இதனை யாராலும் தடுக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று மாலை இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“பல்வேறு வித்தைகளை காட்டி ஆட்சியை கைப்பற்ற ரணில் நினைக்கின்றார். எனினும், அதற்கு நான் ஒருபோதும் இடம்கொடுக்க போவதில்லை.

என்னிடம் பல அஸ்திரங்கள் கைவசம் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டுமானால் அதையும் செய்ய தயங்க போவதில்லை.

எனவே, சம்பந்தப்பட்டவர்கள் விளையாட வேண்டாம் என இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்டுவோம்.

இதனை எவறாலும் ஒருபோதும் தடுக்க முடியாது” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers