மகிந்த - மைத்திரி தரப்புக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி! 14ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்?

Report Print Murali Murali in அரசியல்

எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் வாக்கெடுப்பை நடத்துவற்குத் தீர்மானித்துள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வு சம்பிரதாய அமர்வே இடம்பெற வேண்டும்.

அன்றைய தினம் ஜனாதிபதியின் ஆரம்ப உரையை அடுத்து, நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகள் கோரினர்.

எனினும், இதற்கு கடுமையான எதிர்ப்புகள் வெளியாகின. அத்துடன், நாடாளுமன்றத்தின் நிலையியல் கட்டளை சட்டத்தின் கீழ் சபாநாயகரே அதன் நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டது.

இதன் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய,

“116 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை சமர்ப்பித்துள்ளனர். 14ஆம் திகதி நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைக்கும் ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து வாக்கெடுப்பு இடம்பெறும்.

அரசாங்கத்தின் பெரும்பான்மையை உறுதி செய்வதற்கான வாக்கெடுப்பை நடத்துவதற்காக, தேவைப்பட்டால் நிலையியல் கட்டளைச் சட்டங்களை இடைநிறுத்த தயார்” எனவும் சபாநாயகர் கூறியுள்ளார்.

சபாநாயகரின் இந்த முடிவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சபாநாயகரின் இந்த அறிவிப்பு மகிந்த - மைத்திரி தரப்புக்க மேலும் அழுத்தங்களை கொடுத்துள்ளதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

Latest Offers