ரணிலா - மகிந்தவா! பிரித்தானியா யாரை பிரதமராக ஏற்றுக்கொண்டது?

Report Print Murali Murali in அரசியல்

பிரித்தானியா அரசுகளை அங்கீகரிக்குமே தவிர அரசாங்கங்களை அங்கீகரிப்பதில்லை என ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த 29ம் திகதி பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரித்தானியாவின் நிழல் வெளிவிவகார அமைச்சர் எமிலி தோர்ன்பெரி இலங்கையின், அரசியல் நிலவரம் தொடர்பில் எழுப்பியிருந்த கேள்விக்குக் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்சவையா அல்லது ரணில் விக்கிரமசிங்கவையா பிரித்தானியா ஏற்றுக் கொள்கிறது என்று எமிலி தோர்ன்பெரி கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய அவர்,

“இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம் பெரும் கவலையளிக்கின்றது. இந்நிலையில், பிரித்தானியா அரசுகளை அங்கீகரிக்குமே தவிர அரசாங்கத்தை அங்கீகரிக்காது.

அரசியலமைப்பு மதிக்கப்படுவதையும், அரசியல் மற்றும் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதையும் உறுதி செய்யுமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன்.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த 29ம் திகதி பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பதாகவும்” அவர் கூறியுள்ளார்.

Latest Offers