மைத்திரி - சஜித் சந்தித்து பேச்சு! ரணிலுக்கு தெரியவந்த உண்மை

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தனக்கு தெரியும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இவர்கள் கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார். பிரதமர் செயலக கடித தலைப்புடன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்குத் தெரியாமல், சஜித் பிரேமதாச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார் என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்தச் செய்திகளில் எந்த அடிப்படையும் இல்லை. ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு முன்னர், அதுபற்றி சஜித் பிரேமதாச, தெரியப்படுத்தியிருந்தார்.

சந்திப்புக்குப் பின்னரும், அதுபற்றி தெளிவுபடுத்தியிருந்தார்” என்று கூறப்பட்டுள்ளது.