சுதந்திரக் கட்சியின் யாப்பினை திருத்தம் செய்ய அனுமதி

Report Print Kamel Kamel in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பினை திருத்தம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அரசியல் சபையொன்றை உருவாக்குவதற்கு கட்சியின் யாப்பினை திருத்தி அமைப்பதற்கு மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு மேலதிகமாக மீனவ தொழிற்சங்கமொன்றை உருவாக்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய செயற்குழுவிற்கு மேலதிகமாக அரசியல் சபையொன்றை உருவாக்குவது குறித்த யோசனை இதற்கு முன்னதாக மத்திய செயற்குழுவிடம் முன்வைக்கப்பட்டிருந்தது.

இதற்காக கட்சியின் யாப்பினை திருத்தம் செய்ய வேண்டியிருப்பதனால் அதற்கான அனுமதி நேற்றைய தினம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

Latest Offers