புதிய வெளிவிவகார அமைச்சரின் அழைப்பை நிராகரித்த வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சங்கம்

Report Print Steephen Steephen in அரசியல்

வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம இன்று காலை 10.30 ஏற்பாடு செய்திருந்த வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமான ஊடகவியலாளர் சந்திப்புக்கான அழைப்பை வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சங்கம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் 26 ஆம் திகதி பதவிக்கு வந்த அரசாங்கத்தை எந்த சர்வதேச நாடும் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்காத நிலையில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சங்கம் என்ற வகையில் தம்மாலும் எந்த வகையிலும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொள்ள முடியாது என வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சங்கம் என்ற வகையில் தாம் இவ்வாறான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டால், அரசாங்கத்தை அங்கீகரித்துள்ளதாக அர்த்தப்படுத்தப்படும் எனவும் அப்படி நடந்தால், அது தமது சங்கத்தின் நற்பெயருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால், வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் வரையறுக்காது பொதுவாக அனைத்து ஊடகங்களுக்கும் நடத்தப்படும் பொது ஊடக சந்திப்பு தொடர்பான செய்திகளை சேகரிக்க தாம் தயாராக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சங்கம் தெரியப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Latest Offers