ரங்கே பண்டாரவுக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்தமை தொடர்பில் முறைப்பாடு

Report Print Steephen Steephen in அரசியல்

அரசியல் நிலைப்பாட்டை மாற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவுக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்தமை தொடர்பாக இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆரம்ப விசாரணைகளுக்கு தேவையான தகவல்களை தாம் ஆணைக்குழுவிடம் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கட்சித் தாவலை தடுக்க தேவையான சட்டம் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும் குழு நிலை விவாதத்தின் போது அதனை நீக்க சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

எதிர்காலத்தில் இந்த சட்டத்தை நிறைவேற்றாமல், மக்களின் வாக்குகளுக்கு பொறுப்புக் கூறும் நிலைமை உருவாகாது எனவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers