ஜப்பானின் உதவி தொடர்ந்தும் கிடைக்கும் - அமைச்சர் சரத் அமுனுகம

Report Print Steephen Steephen in அரசியல்

ஜப்பான் நிதியுதவியின் கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்பட திட்டமிடப்பட்டிருந்த அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை கூறியுள்ள அவர், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் தன்னிடம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ஜப்பான் நிதியுதவியின் கீழ் செயற்படுத்த திட்டமிட்டப்பட்டிருந்த இலகு ரக (மோனோ) ரயில் திட்டம் தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டிருந்தார்.

Latest Offers