மாவட்ட அபிவிருத்தித்திட்டங்களை நிறுத்துமாறு மகிந்த உத்தரவு

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டின் அனைத்து மாவட்ட செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் சகல அபிவிருத்தித் திட்டங்களையும் நிறுத்துமாறு உத்தரவிட்டு பிரதமரும் நிதியமைச்சருமான மகிந்த ராஜபக்ச கடிதங்களை அனுப்பியுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அரசியல் மற்றும் அப்பாவி மக்களை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பு என்ன எனவும் ஹர்ச டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன் காரணமாக நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்து வந்த கிராம புரட்சி உட்பட கிராமபுரங்களை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் முடக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers