ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டால், தமிழ் முற்போக்கு கூட்டணி அதனை ஆதரிக்காது என அக்கட்சியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை கூறியுள்ளார்.
பொறுப்பான அரசியல் கட்சி என்ற வகையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை மேலும் அதிகரிக்காது குறைக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மனோ கணேசன் டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.