எனது தீர்மானம் பற்றி மக்களின் நிலைப்பாட்டை அறிய வேண்டும்! பிரதமர் மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

அரசியல் ரீதியான தான் தற்போது எடுத்துள்ள தீர்மானம் குறித்து மக்களின் நிலைப்பாட்டை அறிய வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சர் பந்துல குணவர்தன எழுதிய இலங்கையின் பொருளாதாரத்தின் மூன்றாண்டு முன்னேற்றம் மற்றும் பாதிப்பு என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு நிகழ்வில் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தேர்தல் ஒன்றின் மூலம் தான் எடுத்த தீர்மானம் குறித்து மக்களின் நிலைப்பாட்டை அறிந்துக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும், பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இன்று முற்பகல் பிரதமரின் செயலகத்தில் நடைபெற்றது.

இதன் போது சுகாதார துறையில் காணப்படும் பல பிரச்சினைகள் சம்பந்தமாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை அரச ஊழியர்கள் தமது கடமைகளை மிகவும் பலன் தரக் கூடிய வகையில் முன்னெடுக்க, அச்சமின்றி பணியாற்ற கூடிய சூழலை ஏற்படுத்துவதாக மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

அரச அதிகாரிகளுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Latest Offers