நான் மீண்டும் அமைச்சராக வருவேன்! சூளுரைக்கும் முன்னாள் அமைச்சர்

Report Print Thirumal Thirumal in அரசியல்

மலையக மக்களுடைய வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் சென்று அமைச்சர் பதவியையும் பெற்று மக்களுக்காக சேவை செய்த நான் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் காரணமாக புதிய அமைச்சராக மாற்று கட்சியினை சார்ந்தவர்கள் பெற்றுள்ளார்கள் இருந்தாலும் மீண்டும் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சராக மீண்டும் வருவேன் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஹட்டன், டி.கே.ட.பிள்யு மண்டபத்தில் இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக மலையக மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் ஒன்று இன்று நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் யார் பிரதமராக வந்தாலும் சரி, ஜனாதிபதியாக வந்தாலும் சரி நாங்கள் இணைந்து மக்களுக்காக சேவை செய்ய தயாராக இருக்கின்றோம்.

ஆனால் திடீர் என நாட்டின் ஜனாதிபதி, புதிய பிரதமர் ஒருவரை நியமித்ததை எங்களால் ஏற்று கொள்ள முடியாதுள்ளது.

எங்களுக்கு கோடிக்கணக்கான அழைப்புகள் வந்தது ஆனால் தமிழ் முற்போக்கு கூட்டணி நிதானமாக சிந்தித்து முடிவெடுத்துள்ளோம். நான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் எவரும் செய்யாத வேலை திட்டங்களை நாங்கள் செய்து காட்டி இருக்கின்றோம்.

கடந்த 3 வருடங்களாக இல்லாத அமைச்சர் திடீரென அமைச்சு பதவியை பெற்று கொண்டு பெயர் பலகைகளை மாற்றியுள்ளார். அவருக்கு பெயர் பலகைகளை மாத்திரம் மாற்ற முடியும்.

ஆனால், அவருக்கு வேறு ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்தவர் ஒரு நாடகத்தை ஆடிவிட்டு எங்கள் எல்லோரையும் காட்டி கொடுத்து விட்டார்.

ஆனால் தமிழ் முற்போக்கு கூட்டணி என்றுமே யாரையும் காட்டி கொடுக்காது.

2015ம் ஆண்டுக்கு பிறகு நான் அமைச்சராக இருந்த காலபகுதியில் நான் வழங்கிய நியமனங்களை இரத்து செய்யுமாறு தற்போது உள்ள புதிய அமைச்சர் கூறுகிறார்.

ஆனால் மக்கள் யாரும் பயப்பட வேண்டிய தேவையில்லை. 15ம் திகதிக்கு பிறகு மீண்டும் நான் வருவேன். கடந்த 30ம் திகதி சௌமிaமூர்த்தி தொண்டமானுடைய நினைவு தினத்தன்று நாடாளுமன்ற பதவியில் இருந்து விலக போவதாக கூறினார்கள்.

30ம் திகதிக்கு முன்பு அமைச்சு பதவி பெற்று கொண்டு புதிய பிரதமர் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுவதாகவும்” அவர் தெரிவித்தார்.

Latest Offers