இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் இன்று விடுத்துள்ள எச்சரிக்கை!

Report Print Ajith Ajith in அரசியல்

நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிப்பதில் இலங்கை அரசாங்கம் காட்டிவரும் தாமதம், நாட்டின் கௌரவத்தை பாதிக்கும்.

அத்துடன் முதலீட்டாளர்களின் வருகையையும் பாதிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தலைவரும், நோர்வே மற்றும் சுவிட்ஸர்லாந்தின் தூதுவர்களும் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையின் அரசியல்வாதிகள், அனைவரும் அரசியலமைப்புக்கு மதிப்பதுடன் இலங்கையின் சட்ட ஒழுங்குகளையும் ஜனநாயக விழுமியங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

Latest Offers