இன்று இரவு நாடாளுமன்றம் கலைக்கப்படும்?

Report Print Vethu Vethu in அரசியல்

இன்றிரவு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

சற்று முன்னர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அரச அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு அமைச்சர்கள் நியமனம் செய்தபின், 113 உறுப்பினர்கள் இல்லாத நிலையில், இன்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைக்கவுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அப்படி செய்தால், நம் நாட்டின் உத்தியோகபூர்வ பெயரில் உள்ள “ஜனநாயகம்” என்ற வார்த்தையை அகற்றலாம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சியில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார்.

இதன் காரணமாக ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பு இன்று நாடாளுமன்றத்தை கலைக்கும் அளவுக்கு தீவிரம் அடைந்துள்ளது.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைப்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி இருந்தது. எனினும் அது பொய்யான தகவல் என அரச தகவல் திணைக்களம் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers