கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியை கைதுசெய்யுமாறு மீண்டும் உத்தரவு

Report Print Steephen Steephen in அரசியல்

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி அத்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தனவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கூட்டு கொள்ளைகள் தொடர்பான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவுக்கு நீதவான் ரங்க திஸாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ரவிந்திர விஜேகுணவர்தனவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு அமைய அவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் முழுமையான அதிகாரம், சம்பவம் தொடர்பான விசாரணை நடத்தி வரும் நிஷாந்த சில்வாவுக்கே இருப்பதாக நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்றம் வழங்கிய இந்த உத்தரவை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நிஷாந்த சில்வாவுக்கு எதிராக குற்றவியல் தண்டனை சட்டத்தின் 216 மற்றும் 185 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரங்க திஸாநாயக்க தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனையில் பகுதியில் 11 இளைஞர்களை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட நேவி சம்பத் என்ற சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, தலைமறைவாக இருக்க உதவினார் என கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Latest Offers