எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் அனைத்து அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள்

Report Print Kamel Kamel in அரசியல்

எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் அனைத்து அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

அரசியல் அமைப்பின் அடிப்படையில் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார், அவர் தனது பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.

அமைச்சர்களாக 30 பேரே அங்கம் வகிக்க முடியும், அதன் அடிப்படையில் அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள்.

புதிய பிரதமரை நியமிப்பதற்கான விதிமுறையாகவும் இந்த அணுகுமுறையே அமைந்திருந்தது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் நான், நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தேன்.

இதன்படி அமைச்சர்களின் எண்ணிக்கை 30ஆக வரையறுக்கப்படும். ஏற்கனவே இருந்த 45 அமைச்சர்கள் பிரதமர் உள்ளடங்களாக பதவி இழப்பதுடன் புதிய அமைச்சர்கள் அந்தப் பதவிகளை வகிப்பார்கள்.

எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது, எங்களுக்குத் தேவையான பெரும்பான்மை பலம் உள்ளது.

சபாநாயகரின் செயற்பாடுகள் குறித்து வருத்தமடைகின்றோம், கடந்த காலங்களில் சபாநாயகருக்கு நல்ல மதிப்பு காணப்பட்டது, எனினும் தற்பொழுது அந்த நிலைமை மாறியுள்ளது.

சபாநாயகர் இவ்வாறு நடந்து கொள்வாரா என்பது என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

பிரதமர் நியமனம் அரசியல் அமைப்பிற்கு அமைவானது ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய செயற்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய எங்களிடம் கூறியிருந்தார்.

எனினும் திடீரென அவரது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது வயது காரணமாக ஏற்பட்ட குழப்ப நிலைமையா அல்லது ஏதேனும் அழுத்தங்கள் காரமணாகவே அவர் அவ்வாறு நடந்து கொள்கின்றாரா என்பது புரியவில்லை.

ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறித்து எவரும் சவால் விடுக்க முடியாது என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Latest Offers