ஹக்கிமும் றிசார்ட்டும் வருவார்கள் - எதிர்பார்க்கும் எஸ்.பி.திஸாநாயக்கக

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் றிசார்ட் பதியூதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவு புதிய அரசாங்கத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அதேவேளை நாட்டில் சரியான அரசியல் சக்தி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த எண்ணியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.