பணத்திற்காக கட்சியை காட்டிக்கொடுக்க மாட்டேன்! ஐ.தே.கவின் முக்கிய புள்ளி உறுதி

Report Print Steephen Steephen in அரசியல்

பணத்திற்காக ஒரு போதும் ஆத்ம கௌரவத்தை காட்டிக்கொடுக்க போவதில்லை என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில் எனது பெயரும் இருப்பதாக முன்னெடுக்கப்பட்டு வரும் பிரசாரத்தில் எந்த உண்மையும் இல்லை. இவ்வாறான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவது குறித்து கவலையடைகின்றேன்.

எனது தந்தை காமினி திஸாநாயக்க உயிரை தியாகம் யெ்த ஐக்கிய தேசியக்கட்சிக்காக அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதையே எப்போதும் எதிர்பார்க்கின்றேன்.

குறிப்பாக கண்டி மாவட்டத்தில் வாக்களித்த மக்களுக்கு கௌரவத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் மயந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers