மக்களின் குரல் கேட்கப்படட்டும்! நாமல் அழைப்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

இலங்கையின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஆணையை மக்களுக்கு வழங்குவதன் மூலம் உண்மையான ஜனநாயகம் வெற்றிபெறட்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

சற்று முன்னர் இலங்கை நாடாளுமன்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலைக்கப்பட்டது.

இது தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் குறித்த பதிவினை அவர் இட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து, பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார், இனி மக்களுக்கு என்ன வேண்டும் என்ற மக்களின் குரல்கள் கேட்கப்படட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers