இலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்
277Shares

வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதுவர்கள் மற்றும் ராஜதந்திரிகள், இலங்கை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கைகளை விலக்கி கொள்ள நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என இலங்கையின் வெளியுறவு அமைச்சர் சரத் அமுனுகம பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தமது நாட்டு மக்களுக்கு பயண எச்சரிக்கையை விடுத்திருந்தன.

இலங்கையில் அரசியல் வன்முறைகளுக்கான வாய்ப்புக்கள் இருப்பதாக கூறியே குறித்த பயண எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

எனினும் ஒரு மாதமாகியும் இன்னும் அவை நீக்கப்படவில்லை. இது குறித்தே அமைச்சர் சரத் அமுனுகம தமது கவனத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.