சர்வதேசத்தின் முன் கண்ணீர் விட்டழுத மைத்திரி!

Report Print Vethu Vethu in அரசியல்

சர்வதேச ஊடகவியலாளர்கள் முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்ணீர் விட்டழுததாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் தொடர்பில் சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி அழுதுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் பாரிய மோசடியில் ஈடுபட்டமையினால் அவரை பதவியில் இருந்து நீக்கியதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவரை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என உறுதியாக அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் ஊழல் மிகுந்தவர், அவரது பொருளாதார கொள்கைகள் உள்ளுர் தொழில்துறைக்கு பொருத்தமானவையில்லை.

எங்கள் கலாச்சாரத்திற்கு பொருத்தமில்லாத தீவிரதாரளமயவாத கொள்கையை ரணில் விக்கிரமசிங்க நடைமுறைப்படுத்த முயன்றார் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உள்ளுராட்சி தேர்தலில் தோல்வியடைந்தவேளை ரணில் விக்கிரமசிங்கவை பதவிவிலகுமாறு எவ்வாறு மன்றாடினேன் என விபரிக்கும் போது ஜனாதிபதி கண்ணீர் சிந்தியுள்ளார்.

ரணிலின் பொருளாதார கொள்கைகள் காரணமாகவே நாங்கள் தேர்தலில் தோற்றோம் என அவரிற்கு தெரிவித்தேன், இந்த அறையில் வைத்து அவரை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டேன் அவர் அதனை ஏற்க மறுத்தார் என சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் 100 தடவைக்களிற்கு மேல் வெளிப்படையாக மோதியிருப்போம் எங்கள் மத்தியிலான அதிகாரப்போட்டி குறித்து அமைச்சரவை வெளிப்படையாக அறிந்திருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமராக நியமிக்கப்பட்டவர் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படவேண்டும் என்ற பாரம்பரியமுள்ளது. என்னால் ரணிலுடன் இணைந்து பணியாற்ற முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

2015ற்கு பின்னர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஆணைகுழுவொன்றை அமைக்கப் போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Latest Offers