எனது திறமைப்பற்றி மைத்திரிக்கு தெரியும்! மஹிந்த பெருமிதம்

Report Print Kamel Kamel in அரசியல்

தமது திறமைகள் பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தெரியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

நெருக்கடியான நிலைமைகளின் போது நான் எவ்வாறு ஆட்சி நடத்தினேன் என்பது தற்போதைய ஜனாதிபதிக்கு தெரியும், ஏனென்றால் எமது அரசாங்கத்தில் அவர் அங்கம் வகித்திருந்தார்.

போர் இடம்பெற்ற காலத்தில் எவ்வாறு பணம் தேடினோம், போருக்காக எவ்வாறு பணம் திரட்டி அதனை முன்னெடுத்தோம் என்பது போன்ற விடயங்கள் ஜனாதிபதி மைத்திரிக்கு தெரியும்.

இதன் காரணமாகவே நாடு எதிர்நோக்கியுள்ள கடுமையான நெருக்கடி நிலையில் அவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கில் என்னிடம் ஆட்சிப் பொறுப்பினை ஜனாதிபதி ஒப்படைத்தார்.

நான் அவசரமாக பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறு வழியின்றியே நான் ஏற்றுக்கொண்டேன்.

இன்னும் 18 மாதங்கள் கழித்து நாட்டை பொறுப்பேற்றுக் கொண்டால் நாடு பாரியளவு பாதக விளைவுகளை சந்தித்திருக்கும் அதனால்தான் நான் இப்போதே ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டேன்.

ஜனாதிபதி பொதுத் தேர்தல் நடாத்த எடுத்த தீர்மானம் மிகவும் சரியானது.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சி எந்த வகையிலும் பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்துவதனை விரும்பாது வீண் பிரச்சினை செய்து வருகின்றது, இதனாலேயே இவ்வளவு பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Latest Offers