ஜனாதிபதியின் சவாலை ஏற்றுக்கொள்ளத் தயார்: அஜித் பெரேரா

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சவாலை ஏற்றுக்கொள்ளத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதியின் சவாலை எந்த நேரத்திலும் ஏற்றுக்கொள்ளத்தயார்,

ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவி வழங்குவதாயின் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சத்தியக்கடதாசிகளை சமர்ப்பிக்கத் தயார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சத்தியக்கடதாசிகளை சமர்ப்பிக்க முடியும்.

அவ்வாறு செய்தால் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றி கொள்ளவும் முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு ஜே.வி.பி ஆதரவளிக்காது என ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இன்றைய தினம் வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.