வடிவேல் சுரேஸ் மீது இன்று கொலை முயற்சி? பதுளையில் நடந்தது என்ன

Report Print Kamel Kamel in அரசியல்

தம்மை படுகொலை செய்ய சிலர் முயற்சித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

பதுளை பசறை இந்து ஆலயத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் பசறையில் நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சி கூட்டமொன்றில் வைத்து என்னை படுகொலை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குண்டுத் தாக்குதல் நடத்தி தம்மை படுகொலை செய்ய திட்டமிட்ருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த கொலை முயற்சி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தாரா என்பது பற்றிய விபரங்களை அவர் வெளியிடவில்லை.

யார் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது பற்றியும் அவர் குறிப்பிடவில்லை.

அண்மைய நாட்களில் நாட்டில் இடம்பெற்று வரும் அரசியல் சூழ்நிலையில் மிகவும் பேசப்பட்ட அரசியல்வாதிகளில் ஒருவராக வடிவேல் சுரேஸ் திகழ்கின்றார்.

Latest Offers