இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது தனிப்பட்ட முறையில் தடை?

Report Print Dias Dias in அரசியல்

கனடா நாட்டிற்கு பொதுவாக மனித உரிமைகள் தொடர்பில் அக்கறை உள்ளது. தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி சர்வதேச நாடுகளின் பார்வையை இலங்கை விவகாரத்தில் திருப்ப முயற்சி எடுக்கப்பட்டது என கனடாவின் conservative கடசியின் துணை நிழல் வெளிவிவகார அமைச்சர் Hon. Garnett Genius தெரிவித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்தேறியுள்ள மனித உரிமைகள் அத்துமீறல்கள் தொடர்பில் உங்கள் கருத்து என்ன? என நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கனடாவில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் அமைந்தது. இலங்கை தொடர்பில் அவர்களுக்கு இருந்த அறிவை பயன்படுத்திக் கொள்ளவும் வாய்பாக அமைந்தது.

புலம்பெயர்ந்தவர்களின் அரசியல் தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் இருப்பினும் வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் என்பதிலும் உலக அரங்கில் நடந்தேறும் அரசியல் தொடர்பிலும் அறிந்துகொள்ள ஏதுவாக அமைந்தது.

இலங்கை அரசியலில் சீனா, இந்தியா மற்றும் ரஷ்யாவின் பங்கு. மனித உரிமைகள் அத்துமீறல் விவகாரத்தில் சீனா மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

மட்டுமின்றி இலங்கையின் மீது ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் அங்குள்ள துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்திருக்கலாம். மேலும் ராஜபக்சவுக்கும் இந்தியாவுக்கும் இடையே என்ன பேச்சுவார்த்தை நடந்தது என்பது இன்னமும் வெளிவரவில்லை.

ஆனால் இலங்கை மீதுள்ள சீனாவின் ஆதிக்கத்தை இந்தியா உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

இலங்கையில் நடந்தேறிய மனித உரிமைகள் அத்துமீறல் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள கனடா மீண்டும் அழுத்தம் தர வேண்டும். மட்டுமின்றி போர் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது தனிப்பட்டமுறையில் தடை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.

Latest Offers