ரணில் விக்ரமசிங்க அதிகாரத்தை பகிர்வதற்கு விரும்பவில்லை! மைத்திரி தகவல்

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அதிகாரங்களை பகிர்வதற்கு விரும்பவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

வெளிநாட்டு ஊடகங்களுடன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

என்னை விடவும் அதிகாரப் பகிர்வு குறித்து அதிகளவில் ரணில் விக்ரமசிங்க பேசிய போதிலும் நடைமுறையில் அவர் அதிகாரங்களை பகிரவில்லை.

மாறாக பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களையும் மீளப் பெற்றுக்கொள்ளவே முயற்சித்தார்.

மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டிருந்த சில அதிகாரங்களையும் அவர் மீளவும் பெற்றுக்கொள்ளும் அமைச்சரவை பத்திரங்கள் பலவற்றை சமர்ப்பித்திருந்தார்.

கடந்த மூன்றரை ஆண்டு காலப் பகுதியில் ரணில் விக்ரமசிங்க பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை மீளப் பெற்றுக் கொள்ளும் வகையிலான பல்வேறு யோசனைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்தார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்க நாட்டை பிளவுபடுத்த சதித் திட்டம் தீட்டுவதாகவும் மேற்குலக நாடுகளுடன் இணைந்து அதிகாரத்தை பகிர முயற்சிப்பதாகவும், தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தியுள்ளதாகவும் மஹிந்த தரப்பினர் கடுமையான விமர்சனங்களை சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers