ரணிலை பிரதமராக்கியே தீருவோம்! விடாபிடியில் ஐக்கிய தேசிய கட்சி

Report Print Vethu Vethu in அரசியல்

பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்காமல் விட மாட்டோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சர்வதேச ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கருத்து வெளியிட்டார்.

இதன்போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரணிலை பிரதமராக்க மாட்டேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அகிலவிராஜ் காரியவசம், கடந்த 26ஆம் திகதி காணப்பட்ட நிலைமையை மீண்டும் ஏற்படுத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் அனைவரும் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் பதவிக்காக தலைமைத்துவத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படாதென இங்கு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் பலத்தை கட்டியெழுப்புவதற்காக ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers